அமைச்சர் சேகர்பாபுவுக்கு
திருக்கடையூரில் திருமணம்
-எளிமையாக நடந்தது
திருக்கடையூரில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு சஷ்டியப்த பூஜை மற்றும் திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு 60 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு கோயிலுக்குள் திருமாங்கல்யம் அணிவிக்கும் திருமண நிகழ்ச்சி நடந்து வருவது ஐதீகமாக நீடிக்கிறது.
திருமணமான தம்பதியரில் ஆண் அறுபது வயதை அடையும் போது இரண்டாவது முறையாக திருமணம் நடத்தப்படுகிறது. இதனை "அறுபதாம் திருமணம்", "ஷஷ்டியப்த பூர்த்தி", "மணிவிழா" என்றும் அழைக்கின்றனர். மணி விழா என்று அழைக்கப்படுகிற இந்து சமய வைதீக முறையான மங்கள விழாவாகும்.
இந்நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்ச சேகர்பாபுவுக்கு 60 வயது பூர்த்தியடைந்ததை முன்னிட்டு ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு மனைவி மற்றும் உறவினர்களுடன் வந்தார். மூலவருக்கு அபிஷேக ஆராதனை, தரிசனத்துக்குப்பின், கோயில் வளாகத்தில் மனைவியின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி எளிய முறையில் ஒருசில உறவினர்களுடன் இத்திருமணத்தை அமைச்சர் சேகர்பாபு நடத்தியது குறிப்பிடத்தக்கது.