காரைக்கால்,செப்.26:
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த செருமாவிலங்கையில் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.இங்கு நடப்பாண்டிற்கான முதலாம் ஆண்டு துவக்க விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஹைதராபாத் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை, விஞ்ஞானி முனைவர் பி.முத்துராமன் கலந்து கொண்டார்.பஜன்க்கோ கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்தார்.
பின்னர் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் பேசுகையில் இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் தலைமை பொறுப்புகளில் இருப்பதை சுட்டிக்காட்டினார்.இக்கல்லூரியின் சிறப்பு அம்சங்களையும், பயனடைய போகும் நன்மைகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.பின்னர் துறை பேராசிரியர்கள் பல்வேறு விளையாட்டுகள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் குறித்து விளக்கினர்.இறுதியில் கல்லூரி பேராசிரியர் சங்கர் நன்றியுரை ஆற்றினார்.