தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
அமைச்சர் சந்திரப்பிரியங்கா உதவி
நெடுங்காடு மணல்மேடு பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நிவாரணம் வழங்கினார்.
நெடுங்காட்டை அடுத்த மணல்மேடு பகுதியில் தீவிபத்தில் வீடுகள் சேதமடைந்தன. விபத்திட்டு நடந்த மணல்மேடு பகுதிக்கு புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரப்பிரியங்கா விசிட் செய்தார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் நிவாரணப் பொருட்களை பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கினார். மேலும் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கக்கூடிய நிதி உதவியை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் துணை இயக்குனர் மதன் உடன் இருந்தனர்.