திருநள்ளாரில்
தந்தை கண்டித்ததால்
வாலிபர் தற்கொலை
திருநள்ளாரில் நண்பர்களுடன் எல்லை மீறிய குடியை தந்தை கண்டித்ததால், விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருநள்ளாறு நளன் குளத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகம்(51) செக்யூரிடியாக வேலை பார்த்து வருகிறார். வவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் நண்பர்களுடன் சேர்ந்து எல்லை மீறி மது அருந்தி வந்ததால், அவரை திருத்துவதற்காக அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மன மாற்றத்துக்காக விக்னேஷை வேலைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்னையில் செல்போன் உதிரிப் பாகங்கள் செய்யும் நிறுவனத்தில் இரு மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். திடீரென வேலை பிடிக்கவில்லை என்று சென்னையிலிருந்து திருநள்ளாறு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியில் சென்ற விக்னேஷ் வீடு திரும்பவில்லை. ஷேக்(23), வீரமணி(22) ஆகியோருடன் மது அருந்துவது தெரிந்தது. இதனால் விக்னேஷை அவரது தந்தை செல்போனில் தொடர்பு கொண்டு ''குடியை நீ நிறுத்துவாய் என்றுதான் சென்னைக்கு அனுப்பினோம். இப்படிக்கு குடிக்கிறாயே?" என்று வேதனையுடன் கண்டித்தார்.
அன்றிரவு மின்சாரம் தடைபட்ட நிலையில் விக்னேஷை அவரது வீட்டில் அவரது நண்பர்கள் பைக்கில் கூட்டி வந்து இறக்கிச் சென்றுள்ளதும் தெரிந்தது. மின்சாரம் வந்ததும் மடிக்குச் சென்ற சண்முகம் தனது மகன் விக்னேஷ் மாடியில் இருந்த இரும்புக் கம்பியில் போர்வையால் விக்னேஷ் தூக்குபோட்டு தொங்குவது தெரிந்தது.
அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் தேனூர் அரசு சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை மருத்துவர் பரிசோதித்து விக்னேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சண்முகம் திருநாளார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். விரைந்து சென்ற ஆய்வாளர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் விக்னேஷின் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.