புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி-தம்பி மாரிமுத்து சந்திப்பு
2024 பாராளுமன்ற தேர்தல் குறித்து ரகசிய ஆலோசனை
பரபரப்புத் தகவல்கள்.
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியுடன் மூத்த பத்திரிகையாளரும், காரை முரசு வார இதழின் ஆசிரியருமான தம்பிமாரிமுத்து நிகழ்த்திய சந்திப்பு வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மரியாதை நிமித்தமான சந்திப்பு எனினும், 35 ஆண்டுகால அரசியல் வரலாறு புரிந்த மூத்த பத்திரிகையாளர் தம்பி மாரிமுத்துவுடன் இந்த மாதத்தில் இருமுறை முதல்வர் சந்திப்பு நடத்தியது கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சி சாராது அரசியல் நிகழ்வுகளை அலசும் பத்திரிகையாளர் தம்பிமாரிமுத்து கடந்த 2001, 2006, 2011, 2016, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவ்களை துல்லியமாக கணித்து வெளியிட்டார்.
மேலும், எந்தெந்த கட்சிகளுக்கு என்னென்ன இடங்கள் வெற்றி கிட்டும், எத்தனை சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும், யார் ஆட்சியில் அமர்வார்கள் என்பதையும் காரை முரசு வார இதழில் வெளியிட்டதால் இந்த இதழ் புதுச்சேரி மட்டுமன்றி தமிழகத்திலும் பிரபலமாகியுள்ளது.
இந்த நிலையில் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வர் ரங்கசாமி-மூத்த பத்திரிகையாளர் தம்பி மாரிமுத்து சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதல்வரின் இல்லத்தில் சந்தித்த பத்திரிகையாளர் தம்பி மரிமுத்துவை சால்வை அணிவித்து முதல்வர் ரங்கசாமி புன்னகையுடன் வரவேற்ற படங்களும் வைரலாகியுள்ளன.