திருநள்ளாரில்
டிசம்பரில் ரயில் போக்குவரத்து சந்தேகம்
2024 மார்ச் மாதம் முதல் நிச்சய வாய்ப்பு
தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் தகவல்.
காரைக்கால்-பேரளம் ரயில் பாதைப்பணி முடியாததால் எதிர்பார்த்தபடி வருகிற சனிப் பெயர்ச்சிக்குள் திருநள்ளாறு வழியாக ரயில் போக்குவரத்தை துவங்குவதற்கான வாய்ப்பில்லை என்றும், 2024 மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் தென்னக ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் தெரிவித்தார்.
காரைக்கால்-பேரளம் இடையே 23 கி.மீ தொலைவுக்கு மீட்டர்கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு, 1898-ஆம் ஆண்டு வரை பயன்பாட்டுக்கு வந்தது. 85 ஆண்டுகள் இந்த தடத்தில் இருந்த ரயில் போக்குவரத்தை தென்னக ரயில்வே போதிய வருவாய் இல்லை என்று 1987-இல் நிறுத்தி விட்டது.
உடனடியாக காரைக்கால்-பேரளம் வழித்தட தண்டவாளங்களும் அகற்றப்பட்டன. இதையடுத்து, காரைக்கால்-பேரளம் ரயில் போக்குவரத்து நிரந்தரமாக இல்லாத நிலை உருவானது. இந்த வழித்தடத்தை மீண்டும் உயிரோட்ட வர்த்தகர்கள் இடைவெளியின்றி குரல் கொடுத்தபடி இருந்தனர்.
காரைக்காலில் இருந்து தொடங்கி திருநள்ளாறு, அம்பகரத்தூர், பேரளம் வழித்தடங்கள் மீண்டும் இணைக்கப்பட்டால், திருச்சி, கும்பகோணம் மயிலாடுதுறை சென்னை போன்ற பெருநகரங்களுக்கு எளிதாகி செல்ல முடியும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பின்னர் பல நிலைகளைத் தாண்டி காரைக்கால்-பேரளம் இடையே 23 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதைத் திட்டம் உறுதியானது.
இதைத்தொடர்ந்து, 2023 - 24 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் காரைக்கால் பேரளம் அகல ரயில் பாதை திட்ட பணிகளுக்கு ரூபாய் 183 கோடியை மத்திய ரயில்வே துறை ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து காரைக்கால்-பேரளம் இடையே மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதை பணிகள் வேகமெடுத்து நடைபெற்று வருகிறது.
தற்போது மண் நிரப்புதல் பிளாட்பார்ம் அமைத்தல் தண்டவாளம் பதியும் பணிகளும் உள்ளிட்ட 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது.இதற்கிடையில் வருகிற டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது.
சனி பெயர்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று அதற்கு ரயில்வே பணியை முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இந்நிலையில் நேற்று தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலளார்
கௌசல் கிஷோர் காரைக்காலில் ரயில்வே பணியை ஆய்வு செய்தார்.
வழித்தடங்கள் குறித்து பார்வையிட்டு கட்டுமான பணிகளையும் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் வழித்தடங்களில் உள்ள பாலங்கள் அமைப்பதை பார்வையிட்டு,மின்கம்பங்கள் அமைக்கும் பணியையும் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வரும் டிசம்பரில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவிற்குள் ரயில்வே பணி முடிய வாய்ப்பு இல்லை.அடுத்த ஆண்டு 2024 மார்ச் மாதம் பணி நிறைவு பெற்று காரைக்கால் திருநள்ளாறு வழியில் பேரளம் இடையான முதல் ரயில் இயக்கப்படும் என்றும் கௌஷல் கிஷோர் தெரிவித்தார்.
---------------------------------------
காரைக்கால் பேரளம் ரயில்வே பணிகளை தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலளார்
கௌசல் கிஷோர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது.