Wednesday 22 01 2025

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

புதுச்சேரி சுற்றுலாத்துறை ஊழல் அம்பலம்
சுற்றுலா கோல்மால்!
ஆதர்ஷ்.டி.எம். Sep 30 2023 சுற்றுலா

புதுச்சேரி சுற்றுலாத்துறை ஊழல் அம்பலம்

சுற்றுலா கோல்மால்!

புதுச்சேரி சுற்றுலாத்துறை ஊழல் அம்பலம் 

போட்டிகள், இசை நிகழ்ச்சியில் குளறுபடி 

பரிசுத் தொகை வழங்கியதில் கோல்மால்! 

காரைக்கால் கடற்கரையில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற சுற்றுலா விழாவில் இசை நிகழ்ச்சி நடத்தியதில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பில் புறக்கணிப்பு, புதையல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பரிசுத்தொகை வழங்கியதில் குளறுபடிகளால், புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

உள்ளூர் கலைஞர்கள் அரசு விழாக்களில் மேடையேற்ற அதிகாரிகள் வாய்பளிக்காமல் தவிர்க்கின்றனர். நேற்று முன்தினம் காரைக்கால் கடற்கரையில் நடந்த சுற்றுலா தினம் குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த விளம்பரத்தையும் செய்யவில்லை. உள்ளூர் கேபிளுக்கு ரூ.2000 செலவில் ஸ்க்ரோலிங், பண்பலைக்கு ரூ.6,200- மூலம் விளம்பரம் செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர். 

ஆனால்  உள்ளூர் கலைஞர்களை ஓதுக்கிவிட்டு, திடீரென பல லட்சங்களை காரைக்கால் கடற்கரையில் வாரியிறைத்து, வெளியூர் கலைஞர்களைக் கொண்டு சுற்றுலா விழாவை காரைக்கால் சுற்றுலாத்துறை அலுவலர்கள் செய்துள்ளனர். காரைக்காலுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.20 லட்சத்து 50,000 திருநள்ளாறு சனிபகவான் கோயிலுக்கு ரூ.2.5 லட்சம் தந்துள்ளதாக சுற்றுலாத்துறை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாயின. 

மீதித்தொகை ரூ.18 லட்சத்தை என்ன செய்தார்கள், என்ன கணக்கு காட்டியிருக்கின்றனர் என்பது பூடகமாகவே நீடிக்கிறது. திட்டமிட்டு நிகழ்ச்சியை நடத்தாமல், நிகழ்ச்சி நடந்த காலையில் அழைப்பிதழுடன் அமைச்சர் சந்திரப்பிரியங்காவை சந்தித்து "குத்து விளக்கு ஏற்றினால் போதும்" என்று அழைத்துள்ளனர். தொகுதி எம்.எல்.ஏ நாஜிமையும் கலந்து பேசாமல் விழாவை காதும் காதும் வைத்தாற்போல் நடத்தி முடித்துள்ளனர். 

விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்துள்ளது. ஆனால், சுற்றுலாத்துறை அலுவலர் ராஜவேலு இதில் பங்கேற்கவில்லை.  ஆகா, மருந்துக்கு கூட சுற்றுலாத்துறையினர் பங்கேற்காமலேயே சுற்றுலா விழா நடந்து முடிந்துள்ளது. இந்த விழா நடத்தப்பட்டதில் குறிப்பிட்ட அலுவலரால் தில்லுமுல்லு, பொய் கணக்கு, போலி பில்கள் அரங்கேறியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கடந்த 2021 மற்றும் 2022 காரைக்கால் கடற்கரையில் நடத்தப்பட்ட சுற்றுலாத்துறை விழா, கார்னிவல் விழா அனைத்திலும் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்துள்ளதாக பகிருங்கள் குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன. காரைக்காலில் சுற்றுலாத்துறைக்கு எதிராக இத்தனை வருடங்களில் இப்படி இந்த அளவுக்கு மோசடிக் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..