Tuesday 28 01 2025

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

''தீப்பெட்டி கொடுடீ'' ~ சென்னை 'வெல்கம்' ரவுடி!
#போலீஸ் #CRIME #புதுச்சேரி #ARREST #கஞ்சா #drug #shop #cry #bussiness #puducherry #lg #cm #minister #mla #officers
தம்பி மாரிமுத்து Nov 11 2024 கிரைம் ஏரியா

''தீப்பெட்டி கொடுடீ'' ~ சென்னை 'வெல்கம்' ரவுடி!

புதுச்சேரியில் உள்ளூர் ரவுடிகள்தான் மாமூல் கேட்டு கடைக்காரர்களை மிரட்டித்த தாக்குகிறார்கள் என்றால் ,  உள்ளூர் ரவுடிகளுக்குப் போட்டியாக வெளியூர் ரவுடி ஒருவனும் குஷியாகி குத்தாட்டம் போட்ட சிசி டிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன .

????????????????????????????????   

புதுச்சேரியில் அமைதி, ஆன்மிகம், சுற்றுலா என்று புதுச்சேரி அரசு வெளியூர் சுற்றுலாப் பயணிகளை கூவிக்கூவி அழைத்தபடியிருக்கிறது. வெளியூர்வாசிகளும் புத்துணர்ச்சி, உற்சாகம், ஆரவார எதிர்பார்ப்புடன் புதுச்சேரிக்கு வந்தவண்ணம் உள்ளனர் .

????????????????????????????????  

புதுச்சேரி வர்த்தகர்களும் தங்கம், கார்,  பைக், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்என கோடிக்கணக்கில் பரிசுகளை அறிவித்திருக்கின்றனர். புதுச்சேரி வணிகத் திருவிழாவும் களைகட்டியுள்ள நிலையில், புதுச்சேரியில் வணிக நிறுவனங்களுக்கு ரவுடிகளின் அலப்பறை மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.  

????????????????????????????????

புதுச்சேரி 100 அடி சாலையில் இருக்கும் ஒரு பேன்சி கடையில் வாயில் சிகரெட்டுடன் நுழைந்த ரவுடி ஒருவன் ,  தீப்பெட்டி கேட்டு அளப்பறையில் இறங்க , வாடிக்கையாளர்கள் நாலாபுறமும் சிதறியோடினர் . 

பேன்சி ஸ்டாருக்குள் நுழைந்த ரவுடி அங்கிருந்த இளம்பெண்களை ''வாடி, போடி'' என்று ஒருமையில் அழைக்க ,  அப்பெண்களோ "அண்ணா . .அண்ணா . ." ரவுடிகளிடம் கைகூப்பி கெஞ்சினார் .

 ????????????????????????????????

ஒருகட்டத்தில் தன்னிடம் ''கத்தி இருப்பதாக'' சொல்லி மிரட்டிய ரவுடி, ஆபாச வார்த்தைகளால் அப்பெண்களை வர்ணித்து, தாக்கவும் முனைந்திருக்கிறான். இளம்பெண்கள் கெஞ்சி , கதறியபின் நீண்ட போராட்டத்துக்குப்பின் அந்த ரவுடி கொலை மிரட்டல் விடுத்தபடி வெளியேறியிருக்கிறான் . 

????????????????????????????????

தகவலறிந்து புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்திலிருந்து விரைந்த போலீசார், குறிப்பிட்ட ரவுடியைக் கொத்தாகத் தூக்கிவந்து, காவல் நிலையத்தில் வைத்து  "கொஞ்சு . கொஞ்சென்று கொஞ்சியுள்ளனர். போலீசாரின் விசாரணையில் அந்த ரவுடி சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 42 வயது ரவுடி பழனி என்பது தெரியவந்தது.  

????????????????????????????????

சென்னை ரவுடி பழனியைக் கைது செய்த பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குடிப்பதற்காக புதுச்சேரி வந்த ரவுடி பழனிக்கு,  சிலர் ஒயின் ஷாப்பில் ''இலவச இணைப்பாக''  கஞ்சாவையும் கொடுத்திருக்கின்றனர் .  

????????????????????????????????

குடியோடு ,  கஞ்சா போதையும் கலந்து கட்டி சுழற்றியடிக்க கண்மண் தெரியாமல் புதுச்சேரி வீதிகளில் அலைந்த ரவுடி பழனி, 100 அடி சாலையிலிருந்து பேன்சி ஸ்டோரில் புகுந்து இளம்பெண்களிடம் "நானும் ரவுடிதான்  . .நானும் ரவுடிதான் " என்று ராவடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது . 

????????????????????????????????

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கு துடிப்பும், துணிச்சலும் மிக்க முதுநிலைக் கண்காணிப்பாளர் கலைவாணன் IPS பொறுப்பேற்றிருக்கிறார். புதுச்சேரியில் தலைவிரித்தாடும் கஞ்சா புழக்கத்தால் உள்ளூர் ரவுடிகள் ஏற்கெனவே வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது போதாதென்று,  வெளியூர்களிலிருந்து கஞ்சா மோகத்தில் புதுச்சேரியில் இறக்குமதியாகும் 'வெல்கம் ரவுடி'களாலும் பொதுமக்களின் நிம்மதிக்கு சவால் எழுந்திருக்கிறது.   

????????????????????????????????

புதுச்சேரி காவல்துறைக்கு கடுமையான சட்டங்கள்,  வலிமையான கட்டமைப்பும், நுட்பமான தகவல் தொடர்பு வசதியிருந்தும்,  அரசியல் தலையீடு, போலீசாரின் கடமையுணர்வு, அர்ப்பணிப்பு, செயல்பாடுகளுக்கு வேகத்தடையாக நிற்பது மாற வேண்டும் . 


-காரை முரசு புலனாய்வு செய்திகளுக்காக :தம்பி மாரிமுத்து . 

Related News