காரைக்கால் நகராட்சியில்
குப்பை ஒப்பந்த கொள்ளை
H.R ஸ்கொயர் ஊழல்!
--நேரடி ரிப்போர்ட்.
ஊழல் புரிவதில் புதுச்சேரி என்ன, காரைக்கால் என்ன? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதை உள்ளாட்சித்துறை நிரூபித்திருக்கிறது.
அம்பலம்.
காரைக்காலில் H.R ஸ்கொயர் குப்பை அள்ளும் ஒப்பந்ததாரர்கள் மத்திய அரசின் புடா நிதியைப் பெற்று, குப்பைகளை அல்லாமல் மண்ணை எடைபோட்டு, அதிகாரிகளை மிரட்டி, மாதா மாதம் லட்சக்கணக்கில் பில் தொகையைப் பெற்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுருட்டல்
நகர்புறத்துக்கு மாதம் ரூ.60 லட்சத்துக்கு மேல், கிராமப்புறத்துக்கு ரூ.60 லட்சத்துக்கு மேல் பில்லை தாளித்திருக்கிறார்கள். ஒப்பந்த விதிகளை காற்றில் பறக்க விட்டு, வீடு வீடாக குப்பைகளை சேகரிக்காமல் மாதாமாதம் முள்ளங்கிப் பத்தை போல கரன்சியை சுருட்டியுள்ளனர். புதுச்சேரி உள்ளாட்சித்துறை இயக்குனரை கையில் வைத்துக் கொண்டு பில்லைத் தேற்றியது மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுக்குத் தெரிய வரவே, இனி செயல் தரத்துக்கான சான்றிதழ் இன்றி (performence certificate) பில்லை செட்டில் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்.
ஊழல்
ஊழல் புரிவதில் புதுச்சேரி என்ன, காரைக்கால் என்ன ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பதை புதுச்சேரி உள்ளாட்சித்துறை நிரூபித்திருக்கிறது. காரைக்காலில் வாகனங்களில் வீடு வீடாகச் சென்று மக்கும், மக்கா குப்பைகளை பெற்று, குப்பைக் கிடங்கில் சேர்ப்பிக்க ஹேண்ட் டு ஹேண்டு நிறுவனம் காரைக்கால் நகராட்சியுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.
எதிர்ப்பு
2011 முதல் 2023 பிப்ரவரி வரை ஹேண்ட் டு ஹேண்டு நிறுவனம் வீடுவீடாக குப்பைகளை சேகரித்து குப்பைக் கிடங்கில் சேர்த்தது. ஆரம்பத்தில் இந்நிறுவனம் கிழட்டு டிராக்டரில் குப்பைகளை சேகரிக்கும்போது வீதிகளில் குப்பைகளை இறைத்துச் சென்றதால் பொதுமக்களின் எதிர்ப்புக்குளானது. பின்னர் டாடா ஏசி வாகனங்களில் கவர்ச்சியாக குப்பைகளை சேகரித்தது.
'0'வேஸ்ட்
காரைக்கால் நகர்ப்புறம், கிராமம் அனைத்திலும் சாக்கடையிலிருந்து அள்ளப்படும் மண்ணையும் இதில் சேர்த்து சேகரிக்க வேண்டும். குப்பையில் இருந்து பிரித்த மண்ணை உயிர் உரம். மண்புழு உரம் என மதிப்பு கூட்ட வேண்டும். எஞ்சிய குப்பையில் '0'வேஸ்டை காட்ட வேண்டும். இதற்காக டன் ஒன்றுக்கு காரைக்கால் நகராட்சி ரூ.2,999 வழங்கியது. 2011 முதல் 2023 பிப்ரவரி வரை இத்தொகையை வருடத்துக்கு 20% உயர்த்தி வழங்கவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒப்பந்தம் ரத்து
நகராட்சியிடம் 23,000 வீடுகளில் நேரடியாகச் சென்று குப்பைகளை சேகரிக்க ஹேண்ட் டு ஹேண்ட் நிறுவனம் காரைக்கால் நகராட்சியிடம் இருந்து ரூ. 37 லட்சத்தை மாதக் கட்டணமாகப் பெற்றது. இருந்தும் இந்த நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்ததால், 5 வருட ஒப்பந்த முடிவில் காரைக்கால் நகராட்சி மேற்படி நிறுவனத்தின் குப்பை அள்ளும் ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்தது.
H.R ஸ்கொயர்
இந்த சந்தடியில் குப்பை அள்ளும் டெண்டரில் சென்னையைச் சேர்ந்த H.R ஸ்கொயர் நிறுவனம் பத்தி பத்தியாக ப்ரோபைலை நீட்டியது. 2022 நவம்பரில் காரைக்கால் நகராட்சியிடம் குப்பைகளை சேகரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றது. இந்த ஒப்பந்தப்படி H.R ஸ்கொயர் நிறுவனம் காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனித்தனியே சேகரிக்க வேண்டும். அதுபோல், திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, நிரவி, திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் வீடு வீடாக குப்பைகளை தனித்தனியே சேகரிக்க வேண்டும்.
புடா (PUDA)திட்டம்
2022-ம் வருடம் நவம்பரில் H.R.ஸ்கொயர் நிறுவனம் காரைக்கால் நகராட்சியில் குப்பை அள்ளும் ஒப்பந்ததை பெற்றது. நகராட்சி மூலம் குப்பை அள்ள மத்திய அரசின் புடா (PUDA)திட்டத்தின் நிதியை வழங்குகின்றனர். இந்த நிதியை எடுத்த எடுப்பில் பெற்றுவிட முடியாது. இந்த நிதியை மாதாமாதம் வாங்க காரைக்கால் நகராட்சியால் வழங்கப்படும் செயல்பாடுக்கான சான்றினை(performence certificate)யை சமர்ப்பிக்க வேண்டும்.
விதி மீறல்
ஆனால், துவக்கத்தில் பதவிசாக குப்பைகளை அள்ளிய இந்நிறுவனம் அதிகாரிகளின் ஆதரவால், நகராட்சியை அலட்சியப்படுத்தியது. நகராட்சியில் இரு கோஷ்டிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி, ஆளவும் தலைப்பட்டது. இந்த ஆளுமையால், சராசரியாக 1000 வீடுகளில் அள்ளவேண்டிய குப்பைகளை 800 வீடுகளில் மட்டுமே அள்ளியது. அதுவும் லைசென்ஸ், காப்பீடு காலாவதியான கிழட்டு டிராக்டர்களில் குப்பைகளை ஏற்றி, வீதிகளில் இறைத்ததை பொதுமக்கள் எதிர்த்தனர். இதையடுத்து H.R.ஸ்கொயர் நிறுவனம் டாடா ஏசி. வாகனங்களை கவர்ச்சியாக குப்பைகளை சேகரிப்பதாக கூறப்பட்டது.
பில் நிறுத்தம்
காரைக்காலில் 23,000 வீடுகளில் நேரடி சாக்கடை சந்திப்பு, சாக்கடை திருப்பங்களில் மண்ணை அள்ளுவதில்லை. எண்ணிக்கைப்படி வீடுகளில் குப்பை வாங்குவதிலும் சொதப்பல்கள் நீடித்தன. வீடுகள் கட்டிடங்கள் இடிக்கிற கழிவு மண், சாலையோர மண்ணை அள்ளி எடைபோட்டு துட்டு பார்த்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதன் மீது குற்றச்சாட்டுக்கள் அதிகரித்ததால் நகராட்சி 3 மாத மாதாந்திர பில்லை நிறுத்தி வைத்தது.
ஜபர்தஸ்து
நகராட்சியிடமிருந்து செயல்பாடுக்கான சான்றினை(performence certificate)யைஇந்த சான்றிதழ் இல்லாவிட்டால் புடா நிதி வழங்கப்படமாட்டாது. இதுதான் புடாவின் விதி! ஆனால், குப்பைகளைப் பகுக்காமல், அப்படியே எடை போட்டு, காரைக்கால் நகராட்சியிடம் மேற்படி எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் வெறும் பில்லை மட்டும் நீட்டி மிரட்டியிருக்கிறது. மேலும் நேரடியாக உள்ளாட்சித்துறை இயக்குனரிடமும் பிள்ளை காட்டி பணம் பெற முடியும் என்றும் 'ஜபர்தஸ்து' காட்டியிருக்கிறது.
கலெக்டர் உத்தரவு
காரைக்கால் நகராட்சியில் ஏற்கெனவே இருந்த ஆணையரை புதுச்சேரி உயர் அதிகாரிகள் மூலம் மிரட்டிப் பணிய வைத்த இந்த நிறுவனத்தின் தில்லாலங்கடி வேலை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்குச் சென்றது. செயல்பாடுக்கான சான்று (performence certificate) இல்லாமல் பில்லை செட்டில் செய்யாதீர்கள் என காரைக்கால் நகராட்சிக்கு கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
பணி நிறுத்தம்
இதுவரை நீட்டிய இடத்தில் கையெழுத்து வாங்கி, மாதாமாதம் முள்ளங்கிப் பத்தை மாதிரி ரூ.37 லட்சத்தை வாங்கி வந்த எச். ஆர். ஸ்கொயர் நிறுவனம் கலெக்டர் உத்தரவால் எரிச்சலடைந்தது. வழக்கமான மிரட்டல் பணியில் பில்லை வாங்கத் துடித்தது. கடந்த வாரம் அதிகாலையில் வழக்கம் போல் குப்பைகளை சேகரிக்க வண்டிகள் கிளம்பின.குப்பையை அள்ள வண்டிகளில் ஏறி ஏறப்போன தொழிலாளர்களை "மூன்று மாத பில்லை காரைக்கால் நகராட்சி செட்டில் செய்தபின் கிளம்புங்கள்" என்று H.R.ஸ்கொயர் நிறுவனம் தடுத்தது. இதனால், பொதுமக்கள் கண் முன்னாலேயே குப்பை வண்டிகள் கிளம்பாமல் கலெக்டர் அலுவலக வாயிலிலேயே நிறுத்தப்பட்டன.
மிரட்டல் செட்டில்மென்ட்
தற்போது பண்டிகை நேரம் என்பதால், பொதுமக்கள், வணிகப் பெருமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக கலெக்டர் குலோத்துங்கன் மூன்று மாத பில்லில் இரண்டு மாத பில் தொகையை வழங்க அனுமதித்தார். இருந்தும் எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் திருந்தாமல், புதுச்சேரி உள்ளாட்சி இயக்குநர் அலுவலகத்தில் பில்லை தந்து காரைக்கால் நகராட்சியை மிரட்டி வருவதாக ஊழியர்கள் புலம்பித் தள்ளுகின்றனர்.
அக்கிரமம்
நகராட்சியுடனான ஒப்பந்தப்படி எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவன குப்பை சேகரிப்பு வண்டிகள் தினமும் வீடுவீடாக தினமும் சென்று குப்பையினை சேகரிக்க வேண்டும். அவ்வாறு செயல்படாவிடில் ஒப்பந்தப்படி வண்டிகளுக்கு அபராதம் விதிக்க விதியிருக்கிறது. புடா (PUDA)திட்ட நிதியில் குப்பை அள்ளும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு வண்டிகள் வருவதில்லை. அப்படி வந்தாலும் பல வீடுகளில் குப்பைகளை வாங்குவதில்லை என்று பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கின்றனர்.
அபராதம் இல்லை
வீடு வீடாகச் சென்று வண்டிகளில் குப்பைகளை பெறாத எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்துக்கு ஒப்பந்த விதிப்படி ஒரு முறை கூட அபராதத்தை விதிக்கவில்லை. இதற்கு காரணம் இந்த நிறுவனத்துக்கு ஆதரவாகவும், நேர்மையான ஆணையருக்கு எதிராகவும் நகராட்சியில் செயல்படுகிற சிண்டிகேட் என்று கூறப்படுகிறது. குப்பை அள்ளும் கான்டிராக்ட் எடுத்துள்ள எச். ஆர்.ஸ்கொயருக்கு ஆதரவாக நகராட்சியில் ஒரு சிலர் ஒத்துழைப்பதாகவும், ஆணையர் சத்யாவுக்கு உளவியல் ரீதியில் அழுத்தம் தந்து வருவதாகவும் கூறப்படுகிறது. காரைக்கால் நகராட்சியில் நேர்மை, அனுபவம்,பொறுப்பு மிக்க ஆணையர் சத்யாவுக்கு ஊழியர்களில் இந்த சின்டிகேட் ஒத்துழைப்பதில்லை என்கிற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
வாகனங்களின் நிலை
நகராட்சியிடம் ஒப்புக் கொண்டபடி எச்.ஆர்.ஸ்கொயர் 23 வண்டிகளில் குப்பைகளை சேகரிப்பது கிடையாதாம். பர்மிட், காப்பீடு, எஃப்சி இல்லாத, பதிவெண்கள் அற்ற குறைந்த எண்ணிக்கையிலான பாடாவதி டிராக்டர், டாடா ஏ.சி. வண்டிகளை நகர்த்திச் செல்வதாகவும் குற்றச்சாட்டு வெடித்துள்ளது. அதுபோல் நிரவி, திருப்பட்டினம், நெடுங்காடு கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து பகுதி களில் வண்டிகள் சென்று குப்பையை சேகரிக்காமல், கிழடு தட்டிய 407 வாகனங்கள் மூலம் மாதாமாதம் மாதம் சுமார் 60 லட்சத்தையும், நகராட்சியிடம் இருந்து சுமார் ரூ.60 லட்சத்தை யும் சுருட்டிக் கொண்டிருப்பதாக பகிரங்கக் கிறது. குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன.
எடைக்கு மண்
டிராக்டர்கள், டாடா ஏசிகள், 407 வண்டி களில் குப்பையை அள்ளாமல் வீட்டு இடி ஒப்பந்தப்படி மக்கும். மக்கா குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரிப்பதில்லை. கட்டிட இடிபாடுகள். சாலையோர மண். தெருக்களின் மண்ணை எடை போட்டு, நகராட்சியிடம் அடாவடியாக பில்லை நீட்டி மத்திய அரசின் புடா நிதியை வழங்க அழுத்தம் தருவதாகவும் தெரிகிறது.
ஆய்வுக்குழு
ஒவ்வொரு மாதமும் மக்கள் வரிப்பணத்தை விஞ்ஞான பூர்வ ஊழல் செய்து தைரியமாக கொள்ளையடித்து வரும் எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தின் மீது கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வறிக்கை குழுவை நியமிக்க வேண்டும். நகராட்சியால் வழங்கப்படும் செயல்பாடுக்கான சான்றினை (performence cer- tificate) வழங்கும் முன்பாக 18 வார்டுகளை சேர்ந்த குடியிருப்போர் நலவாழ்வுச் சங்கத்தின் அறிக்கையை பரிசீலிக்க வேண்டும்.
சூட்டிங்
புடா (PUDA)திட்டத்தின் நிதியை எச்.ஆர். ஸ்கொயர் நிறுவனம் வாங்கிக் கொண்டிருக்கிறது. சாலையில் குப்பையை அள்ளி, தூய்மை செய்ய வாகனம் ஒன்றை வரவழைத்து ஒரே ஒரு நாள் சூட்டிங் நடத்தினார்கள். மறுநாள் முதல் அந்த வாகனம் குப்பைக் கிடங்கில் நிற்கிறதாம். கண்ணுக்கெதிரில் நடகும் பகல் கொள்ளையை அதிகாரிகள், அரசியல்வாதிகள், சமூக வலைதள 'மண்டை வீங்கிப் பேச்சாளர்கள்' பேசாமல் மௌனிக்கின்றனர்.
விஞ்ஞான ஊழல்
மத்திய அரசின் பசுமைத் தீர்பாயத்தின் விதி களையும் எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் பின்பற்றுவதில்லை. குப்பை அள்ளாமல், போலி பில் வசூலிப்பது, குப்பைக்கிடங்கில் மக்கும் மக்கா குப்பைகளை பிரிக்காமல் கவிழ்த்து விட்டு பில்லை நீட்டுவதற்கு அபராதத்தை நகராட்சி வசூலித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை வசூலித்ததில்லை. இனியும் வசூலிப்பார்களா? தெரியவில்லை.
ஆய்வறிக்கை
ஒவ்வொரு மாதமும் மக்கள் வரிப்பணத்தை விஞ்ஞான பூர்வ ஊழல் செய்து தைரியமாக கொள்ளையடித்து வரும் எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தின் மீது கலெக்டர் குலோத்துங்கன் விசாரணைக்குழு அமைக்க வேண்டும். விசாரணை குழு அறிக்கைபடி அபராதத் தொகையை பில்லில் கழிக்க வேண்டும். நகராட்சியால் வழங்கப்படும் செயல்பாடுக்கான சான்றினை(performence certifi- cate) வழங்கும் முன்பாக 18 வார்டுகளை சேர்ந்த குடியிருப்போர் நலவாழ்வுச் சங்கத்தின் அறிக்கையை பரிசீலிக்க வேண்டும். இந்த சான்றிதழ் இல்லாவிட்டால் மத்திய அரசின் (PUDA)திட்டத்தின் நிதியை வழங்கக்கூடாது.
ஈரம் அமைப்பு
எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் காரைக்கால் நகராட்சியுடன் கடந்த பிப்ரவரியில் ஒப்பந்தம் போட்டு 8 மாதங்களாகிறது. ஒப்பந்தப்படி உருப்படியாக வீடுவீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக ஈரம் அமைப்பு பொதுநல வழக்கைத் தொடுக்கவும் ஆயத்தமாகி வருகிறது.
பெயர் நாறும்
பொதுமக்கள் கலெக்டர், ஆணையரிடம் நேரில் பலமுறை புகார் தந்தும், தங்கள் மீது நடவடிக்கை இன்றி, மாதாமாதம் பில்லைத் தந்து, பொதுமக்கள் வரிப்பணத்தை அள்ள மேலிடத்தில் டீல் செய்திருப்பதாகவும் புது தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் ஊரும், அரசின் பேரும் நாறும் நிலை வரும்!