Thursday 21 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

நெடுங்காட்டில் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது  இருவர் படுகாயம்-ஓட்டுநர் ஓட்டம்
நெடுங்காட்டில் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது இருவர் படுகாயம்-ஓட்டுநர் ஓட்டம்
நவீன் பாரத் Oct 23 2023 செய்திகள்

நெடுங்காட்டில் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது இருவர் படுகாயம்-ஓட்டுநர் ஓட்டம்

       காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு நேற்று நள்ளிரவு நோயாளியின் வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டிற்கு சாலையில் உருண்டதால் நோயாளியும், துணைக்கு பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் ஆம்புலன்சுடன் நோயாளியை விட்டுவிட்டு தலைமறைவான ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் தானம் பேட்டை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் விவசாயி சேகர்(60), இவர் தனது உறவினர் வீட்டார் திருவாரூர் மாவட்டம் திருக்கொட்டாரத்துக்கு வயல் வேலைக்காக வந்திருந்தார். நேற்று முன்தினம் வயலில் வேலை செய்தபோது அவரை தேள் உடலின் பல இடங்களில் கொட்டியது.

வலி தாளமுடியாமல் துடித்த அவரை அவரது உறவினர்  திருக்கொட்டாரத்தைச் சேர்ந்த முத்துராமன்(48) நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். வலியின் அவதியால் தவித்த அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவர் பரிந்துரைத்தார்.

நேற்று நள்ளிரவு அவரை ஆம்புலன்சில் ஏற்றி காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆம்புலன்சில் அவரது உறவினர் முத்துராமனும் இருந்தார். ஆம்புலன்சை  திருநள்ளாறை அடுத்த கீழாவூரைச் சேர்ந்த செந்தில்(48) ஓட்டி வந்தார். நெடுங்காடு மேலக்காசாக்குடி சாலையில் அதிவேகத்தில் வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

அதிவேகத்தில் வந்து கவிழ்ந்ததில் அடுத்தடுத்து சாலையில் உருண்ட ஆம்புலன்சுக்குள் இருந்த நோயாளி சேகர், அவரது உறவினர் முத்துராமன் படுகாயமடைந்து அலறினர். இந்த சந்தடியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில் நைசாக நழுவித் தப்பி தலைமறைவானார்.


விபத்துக்குள்ளான ஆம்புலன்சில் தோற்றங்கள்


அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்சுக்குள் சிக்கிய சேகர், முத்துராமனை மீட்டனர். தகவலறிந்து காயம் பட்ட இருவரையும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஆம்புலன்சில் மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கால் எலும்பு முரிவு, தலை மற்றும் நெஞ்சில் அடிபட்டு படுகாயமடைந்த சேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

போலீசாரின் விசாரணையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததால் விபத்து நடந்தது தெரிய வந்துள்ளது. சேகரின் உறவினர் முத்துராமனின் இதுகுறித்து காரைக்கால் வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் தந்ததைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஓட்டுநர் செந்திலை தேடி வருகின்றனர். 

ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் கால்முரிவுடன் கிடந்த சேகர்



Related News