காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்பாரேன்ஸ்ரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயம் உள்ளது.இங்கு நவராத்திரி 7ம் நாள் முன்னிட்டு அம்பாள் ஸ்ரீ பிரணாம்பிகை வஜ்ராங்கி உடன் கூடிய சயன கோலத்தில் ரங்கநாதர் அலங்காரத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நவராத்திரியை முன்னிட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பிரணாம்பிகை தாயாரின் வஜ்ராங்கி உடன் கூடிய சயன கோலத்தில் உள்ள ரங்கநாதர் அலங்காரத்திற்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் வஜ்ராங்கி உடன் கூடிய சயன கோலத்தில் உள்ள ரங்கநாதர் அலங்காரத்தை தரிசித்து வழிபட்டனர்.